Home உலகம் புதிய உலக அழகி மெக்சிகோவின் வெனிசா

புதிய உலக அழகி மெக்சிகோவின் வெனிசா

1766
0
SHARE
Ad

சான்யா (சீனா) – இங்கு இன்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற மிஸ் வோர்ல்ட் எனப்படும் உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவின் வெனிசா போன்ஸ் டி லியோன் (Vanessa Ponce de Leon) வாகை சூடினார்.

அவருக்கு அடுத்து இரண்டாவது நிலையில் தாய்லாந்து நாட்டின் அழகி நிக்கோலின் லிம்சுனுகான் வாகை சூடினார்.

2017-ஆம் ஆண்டுக்கான இதே உலக அழகிப் பட்டத்தை வென்றவர் இந்தியாவின் மனுஷி சில்லார் ஆவார். இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உலக அழகிக்கு மனுஷி சில்லார் முடிசூட்டினார்.

#TamilSchoolmychoice

26 வயதான வெனிசா முழுநேர விளம்பர அழகியாகப் (மாடல்) பணியாற்றி வருபவர். மெக்சிகோ நாட்டிலிருந்து இந்த அழகிப் பட்டத்தை வெல்லும் முதல் அழகியும் அவர்தான்.

மெக்சிகோ நாட்டின் பல்கலைக் கழகம் ஒன்றில் அனைத்துலக வணிகத் துறையில் பட்டம் பெற்றவர் வெனிசா.

ஆழ்கடல் நீச்சலிலும் கடலுக்கடியில் முக்குளிப்பையும் (Scuba diving) பொழுதுபோக்காகக் கொண்டவர் வெனிசா.

மனித உரிமைகள் துறையிலும் டிப்ளமா சான்றிதழ் பெற்றவர் வெனிசா.