பொகொதா: தென் அமெரிக்காவில் புதன்கிழமை 3.5 மில்லியன் கொவிட்19 சம்பவங்கள் பதிவாகின. மேலும், 150,000 இறப்புகளைத் தாண்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் சராசரியாக 65,000 தினசரி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு மேல் ஒரு மில்லியன் தொற்றுநோய்கள் இப்பகுதியில் பதிவாகியுள்ளன.
பிரேசில் கிட்டத்தட்ட 2 மில்லியன் தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது. மெக்சிகோ, பெரு, சிலி நாடுகளில் 311,000 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
உலகின் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளான 10 நாடுகளில் அடங்கியுள்ள இந்த நான்கு நாடுகளும், பல்வேறு அளவுகளில், சில கட்டுப்பாடுகளை நீக்கத் தொடங்கியுள்ளன.
பிரேசிலில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீண்டும் கொவிட்19-க்கு சாதகமாக சோதனை செய்தார் என்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
போல்சனாரோ முதன்முதலில் ஜூலை 7- ஆம் தேதி இந்த நோய்க்கு உட்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். நச்சுயிருக்கு எதிராக பயனுள்ளது என்று நிரூபிக்கப்படாத ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்வதாக அவர் கூறியிருந்தார்.
பிரேசில் 75,366 இறப்புகளையும், 1,996,748 உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களையும் பதிவு செய்துள்ளது. இது அமெரிக்காவிற்கு பின்னால் உலகின் இரண்டாவது மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக உள்ளது.
மெக்சிகோவில் சம்பவங்கள் 311,000- ஐத் தாண்டி 36,000 இறப்புகளைக் கொண்டுள்ளன.