அவர்கள் பணிச் செய்யும் துறைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியதும், அவர்கள் பணியைத் தொடரலாம் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
ஆயினும், அவர்கள் கொவிட்19 பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். கொவிட்-19 பாதிப்புக் காரணமாக பல்வேறு துறைகளில் வெளிநாட்டினர் வேலைக்கு அமர்த்தப்படாமல் இருக்கின்றனர். இதனால், அவர்களின் வாழ்வாதாரம் இங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முழுவதும் நாட்டில் பணி அனுமதி பெற்ற வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்குத் திரும்ப அனுமதிக்க சிறப்பு அமைச்சரவைக் குழு ஒப்புக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது, பெரும்பாலான பொருளாதார, வணிக நடவடிக்கைகளை மூடப்பட்டன. இதனால், வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அரசாங்கம் அறிந்திருப்பதாக அவர் கூறினார்.