Home One Line P1 கொவிட்19: மலேசியர்களுக்குப் பாதிப்பு இல்லை

கொவிட்19: மலேசியர்களுக்குப் பாதிப்பு இல்லை

434
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,737-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 3 சம்பவங்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர் ஆவார். உள்நாட்டில் இரு வெளிநாட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, இன்று 12 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8538-ஆக உயர்ந்தது.

நாட்டில் மொத்தம் 77 பேர் மட்டுமே இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒருவருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.