Home Video பேட்ட : ரஜினியின் இளமை ஆட்டத்துடன் ‘உல்லாலா’ பாடல்

பேட்ட : ரஜினியின் இளமை ஆட்டத்துடன் ‘உல்லாலா’ பாடல்

1302
0
SHARE
Ad

சென்னை – நாளை ஞாயிற்றுக்கிழமை ரஜினியின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி – பொங்கல் வெளியீடாக வெளிவரவிருக்கும் – ‘பேட்ட’ படத்தின் இசைவெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் அனிருத் இசையில் ‘மரண மாஸ்’ என்ற பாடல் சில நாட்களுக்கு முன்னால் வெளியிடப்பட்டு சமூக வலைத் தளங்களிலும், தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுடன் கலக்கி வருகிறது. 10 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் மட்டும் எட்டியிருக்கிறது இப்பாடல்.

நேற்று வெள்ளிக்கிழமை ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது பாடல் – உல்லாலா, எத்தனை சந்தோஷம் தினமும் கொட்டுது உன்மேலே – என்ற பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ரஜினி பாடுவது போல் அமைந்திருக்கும் இந்தப் பாடலோடு சில காட்சிகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்தக் கால ‘தளபதி’ படத்தில் வந்த ‘அடி ராக்கம்மா கையைத் தட்டு’ என்ற பாடலில் அமர்க்கள ஆட்டம் போட்ட இளமைக்கால ரஜினியை நினைவுபடுத்துவதுபோல் ரஜினியின் தோற்றமும், ஆட்டமும் வடிவமைக்கப்பட்டிருக்கிது.

வெளியிடப்பட்ட ஒரே நாளில் 26 இலட்சம் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது இந்தப் பாடல். இந்தப் பாடலின் காணொளி வடிவத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: