Home உலகம் ‘மிஸ் இந்தியா’ மனுஷி சில்லார் உலக அழகியாகத் தேர்வு!

‘மிஸ் இந்தியா’ மனுஷி சில்லார் உலக அழகியாகத் தேர்வு!

2518
0
SHARE
Ad

manushi chillar -miss worldசான்யா சிட்டி (சீனா) – சீனாவின் சான்யா சிட்டி அரினா என்ற இடத்தில் நேற்று சனிக்கிழமை (18 நவம்பர் 2017) நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் (மிஸ் வோர்ல்ட் – Miss World 2017) இந்திய அழகி மனுஷி சில்லார் 2017-ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக முடிசூட்டப்பட்டார்.

பல ஆண்டுகளுக்கு முன்பாக வரிசையாக உலக அழகிப் பட்டங்களை, ஐஸ்வர்யா ராய், யுக்தா முகி, பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென் என வரிசையாகப் பல இந்திய அழகிகள் வென்று வந்தனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மிஸ் வோர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் போன்ற முக்கிய உலக அழகிக்கான பட்டங்களை இந்திய அழகிகள் யாரும் வெல்லவில்லை.

#TamilSchoolmychoice

இந்நிலையில் ஹரியானாவைச் சேர்ந்த மனுஷி சில்லார் இந்த ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

118 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கு கொண்ட போட்டியில் மனுஷி சில்லார், இறுதிப் போட்டிக்குத் தேர்வான 5 பேர்களில் ஒருவராவார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்:-

“உலகிலேயே எந்தப் பதவி அதிகமான சம்பளம் பெறுவதற்கு ஏற்ற பதவி?”

அந்தக் கேள்விக்கு பதிலளித்த மனுஷி சில்லார், “உலகிலேயே அதிக சம்பளம் பெறக் கூடிய தகுதி வாய்ந்த பதவி ‘தாயார்’ பதவிதான். அதற்குத்தான் அதிக சம்பளம் தரப்பட வேண்டும்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவர் உலக அழகியாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, முடிசூட்டப்பட்டார். அவருக்கு கடந்த தவணைக்கான உலக அழகியான மிஸ் புவர்ட்டோ ரிகோ, ஸ்டெப்னி டெல் வேல், முடிசூட்டினார்.