Home இந்தியா பல வார விமர்சனங்களுக்கு பிறகு மிஸ் இந்தியா 2019 தேர்ந்தெடுக்கப்பட்டார்!

பல வார விமர்சனங்களுக்கு பிறகு மிஸ் இந்தியா 2019 தேர்ந்தெடுக்கப்பட்டார்!

869
0
SHARE
Ad

புது டில்லி: ஒரே மாதிரியாக தோற்றமளிக்கும் போட்டியாளர்கள் மீது வைக்கப்பட்ட பல வார விமர்சனங்களைத் தொடர்ந்து மிஸ் இந்தியா 2019 வெற்றியாளர் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜஸ்தானின் சுமன் ராவ் (20) கடந்த சனிக்கிழமை மும்பையில் நடந்த நிகழ்ச்சியின் போது வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வருகிற டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற இருக்கும் மிஸ் வோர்ல்ட் 2019-இல்  இந்திய நாட்டை பிரதிநிதித்து சுமன் போட்டியிடப்போவது குறிப்பிடத்தக்கது.

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாளில் 30 பங்கேற்பாளர்களைக் கொண்ட ஒரு படத்தொகுப்பு வெளியிடப்பட்ட பின்னர், இந்த அழகுப் போட்டி தீவிர விமர்சனத்திற்கு உட்பட்டது.

#TamilSchoolmychoice

போட்டியாளர் அனைவரும் ஏறக்குறைய ஒரே மாதிரியான தோல் நிறத்திலும், கருப்பு நிறக் கூந்தலிலும் இருந்தது மக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்தியா பல்வேறு இன மக்களைக் கொண்ட நாடென்றும், அந்த கலவையை இம்முறை காண முடியவில்லை என்றும் அவர்கள் விமர்சித்திருந்தனர்.

தற்காலத்தில்,அழகுப் போட்டிகள் போட்டியாளர்களின் புத்திசாலித்தனம் மற்றும் திறமை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த முயற்சிக்கின்றன. இது பாரம்பரியமாக தீர்மானிக்கப்படும் பெண்ணின் அழகை ஒதுக்கும் செயலாக உள்ளதாக பலர் கருதுகின்றனர்.