Home நாடு மலிவு மதுபானங்கள் அருந்தி 6 பேர் மரணம்!

மலிவு மதுபானங்கள் அருந்தி 6 பேர் மரணம்!

753
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

ஜோர்ஜ் டவுன்: மலிவான மதுபானங்களை அருந்தியதாக நம்பப்படும் ஆறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக ஜோர்ஜ் டவுன் காவல் துறை உதவி ஆணையர் சே சைமானி சே அவாங் கூறினார்.

அவர்களில் இருவர் உள்நாட்டவர்கள். மேலும், மூவர் மியான்மர் நாட்டினர்கள் என்றும், மற்றுமொருவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மேலும் ஏழு மியான்மர் நாட்டினர் தற்போது பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இவ்வகையான மலிவான மதுபானங்களில் மெத்தனால் வகையான நச்சு கலக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  கடந்த இரண்டு மாதங்களாக சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் கும்பல்களினால் இவ்வகையான மதுபானங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி கோம்தாரில் உள்ள ஒரு கடையில் காவல் துறையினர் சோதனை நடத்தியதாகவும், அந்த சோதனையின் போது 8,000 ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். 

ஆயினும், இந்த சோதனைக்கும் தற்போது ஏற்பட்டுள்ள இறப்புக்களுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதை காவல் துறை ஆராய்ந்து வருவதாக சைமானி குறிப்பிட்டார். இதே மாதிரியான சம்பவம் ஒன்றில் கடந்தாண்டு செப்டம்பரில் பேராக்கில் 33 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.