Home நாடு கணவன், மனைவி பிரதமர், துணைப் பிரதமர் பதவியிலிருப்பது ஏற்க முடியாது!

கணவன், மனைவி பிரதமர், துணைப் பிரதமர் பதவியிலிருப்பது ஏற்க முடியாது!

1241
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு தொடங்கியே பிகேஆர் கட்சியின் தலைவரான அன்வார் இப்ராகிம் பிரதமர் பதவியினை ஏற்பது குறித்து நம்பிக்கைக் கூட்டணி பங்காளிகள் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

ஒரு சிலர் மகாதீர் அவ்வளவு எளிதில் தனது பிரதமர் பதவியினை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும், ஒரு சிலர் பிரதமர் மகாதீரை வீழ்த்துவதற்கு அன்வார் பல்வேறு நடவடிக்கைகளை கூட்டணிக்கு வெளியிலிருந்து செய்வதாகவும் கூறப்பட்டு வந்தன.

தொடர்ச்சியாக, சமீபத்தில் அன்வார் இப்ராகிம் பிரதமாராக பதவி ஏற்றால் துணைப் பிரதமர் பதவியை வகிக்கும் வான் அசிசா வான் இஸ்மாயில் தனது பதவியிலிருந்து விலகுமாறு கூட்டணிக்குள்ளிருந்து கருத்துகள் வெளிவருகின்றன.

#TamilSchoolmychoice

இதனை, ஆமோதிக்கும் வகையில் சிலாங்கூர்  மாநில பெர்சாத்து கட்சியின் பொருளாளரான முகமட் ஷாயிட் ரொஸ்லியும் கருத்துரைத்துள்ளார். அன்வார் பிரதமர் பதவியினை ஏற்பதற்கு முன்பதாக வான் அசிசா துணைப் பிரதமர் பதவியினை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அவர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

கணவன் மனைவி இருவரும் பிரதமர், துணைப் பிரதமர் பதவியில் இருப்பது சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார். முன்னதாக, அன்வார் இப்ராகிம் பிரதமர் பதவியினை ஏற்பதற்கு முன்பதாக அதற்கான கால அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அரசு சாரா அமைப்பு ஒன்று கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.