Home Video இளமை துள்ளலோடு, அதிர வைக்கும் காட்சிகளுடன் ‘ஆதித்யா வர்மா’!

இளமை துள்ளலோடு, அதிர வைக்கும் காட்சிகளுடன் ‘ஆதித்யா வர்மா’!

710
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘ஆதித்யா வர்மா’. தெலுங்கில் வெளிவந்து வெற்றிக் கொடி நாட்டிய படம்அர்ஜூன் ரெட்டிஎனும் படத்தின் தழுவலாகவே இப்படம் வெளிவர இருக்கிறது.

இப்படத்தினை இ4 எண்டெர்டெயிண்ட்மெண்ட் (E4 Entertainment) நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில், இத்திரைப்படம் எதிர்பார்த்தது போல் படமெடுக்கப்படாதது குறித்து இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் மற்றும் தயாரிப்பாளர் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டு, இயக்குனர் பாலா படத்திலிருந்து விலக்கப்பட்டார்.

தற்போது, இப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்று வரும் அதே வேளையில், மாற்று கருத்துகளும் இரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இளமை துள்ளலோடு, அதிர வைக்கும் காட்சிகளுடன் இப்படத்தின் முன்னோட்டக் காணோளி சுமார் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. கீழே காணப்படும் இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: