Home நாடு 12 பேர் கொண்ட ஆண்டுக் கூட்டம்: பெர்சாத்து கட்சிக்கு ஆர்ஓஎஸ் எச்சரிக்கை!

12 பேர் கொண்ட ஆண்டுக் கூட்டம்: பெர்சாத்து கட்சிக்கு ஆர்ஓஎஸ் எச்சரிக்கை!

998
0
SHARE
Ad

mahathirகோலாலம்பூர் – கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி, பெர்சாத்து கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றதாக அக்கட்சி விண்ணப்பித்திருக்கிறது. ஆனால் 12 பேர் மட்டுமே பங்குபெற்ற அக்கூட்டம் மாபெரும் பொதுக்கூட்டமாகக் கருதப்படாது என்றும், அது உச்சமன்ற கூட்டமாகவே கருதப்படுகின்றது என்றும் சங்கங்களின் பதிவிலாகா (ஆர்ஓஎஸ்) தெரிவித்திருக்கிறது.

இது குறித்து ஆர்ஓஎஸ் பொது இயக்குநர் சூரியாதி இப்ராகிம் கூறுகையில், “கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி இஜிஎம் நடைபெற்றதாக பெர்சாத்து கூறுகிறது. ஆனால் அதில் 12 உச்சமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்திருப்பது பதிவுகள் காட்டுகின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.

 

#TamilSchoolmychoice