சென்னை – சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘இம்சை அரசன் 23-ம் புலிக்கேசி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான, ‘இம்சை அரசன் 24-ம் புலிக்கேசி’ அதே சிம்புத்தேவன்- வடிவேலு கூட்டணியில் அண்மையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து நடிகர் வடிவேலு பாதியிலேயே விலகிக் கொண்டதாகவும், விலகியதற்கு வடிவேலு இன்னும் சரியான காரணம் சொல்லவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.