Home கலை உலகம் வடிவேலு இல்லாமல் ‘காண்ட்ரேக்டர் நேசமணி’ தலைப்பில் புதிய படம் உருவாகிறது!

வடிவேலு இல்லாமல் ‘காண்ட்ரேக்டர் நேசமணி’ தலைப்பில் புதிய படம் உருவாகிறது!

1170
0
SHARE
Ad

சென்னை: ஒரே நாளில் உலக மக்களின் பார்வையை பெற்ற ‘காண்ட்ரேக்டர் நேசமணிகதாபாத்திரத்தை வைத்து புதிய படம் ஒன்று தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிவில் எஞ்ஜினேரிங் லேனர்ஸ் (Civil Engineering Learners) என்ற முகநூல் பக்கத்தில் சுத்தியல் புகைப்படம் பதிவிட்டு இது என்ன என கேட்டதற்கு, விக்னேஷ் பிரபாகர் என்பவர் பதிவிட்ட கருத்தால் உலகளவில் பிரே பார் நேசமணி (#Pray_for_Nesamani) எனும் ஹேஸ்டேக் பிரபலமானது

இன்றையக் காலக்கட்டத்தில் ஏதேனும் ஒரு புகழ் பெற்ற பாடலோ, படமோ இருந்தால் அந்த பாடலின் முதல் வரியை புதிய படத்தின் பெயராக வைக்கப்படுவது வழக்கமாகி வருகிறது.

#TamilSchoolmychoice

அவ்வகையில், ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றகாண்ட்ரேக்டர் நேசமணிஎன்ற தலைப்பில் புதிய படத்தை எடுக்க தயாரிப்பாளர் ஒருவர் தமிழ் திரப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறதுயார் அந்த தயாரிப்பாளர், நடிகர்கள் யார் என்ற விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை

ஆயினும், ‘24-ஆம் புலிகேசிபடப் பிரச்னைக் காரணமாக படங்களில் நடிப்பதற்கு வடிவேலுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் நடிக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதி.