Home இந்தியா மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் இலாகா பட்டியல்!

மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் இலாகா பட்டியல்!

1391
0
SHARE
Ad

புது டில்லி:  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில், அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சகமும், ராஜ் நாத் சிங்கிற்கு பாதுகாப்புத் துறையும், நிதின் கட்கரிக்கு மீண்டும் சாலை மற்றும் போக்குவரத்துத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு, இம்முறை நிதித்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்மிர்தி இரானிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒதுக்கப்படுள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி வசம் அணுசக்தி, விண்வெளி, ஒய்வூதியம் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் உள்ளன.

#TamilSchoolmychoice

அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் இலாகா விவரங்கள் கீழ் வருமாறு:

1. பிரதமர் நரேந்திர மோடிஅணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் அமைச்சர்.

2. ராஜ்நாத் சிங்ராணுவத் துறை அமைச்சர்

3. அமித் ஷாஉள்துறை அமைச்சர்

4. நிதின் கட்கரிசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்; மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சர்

5. டி.வி.சதானந்த கவுடாஇராசயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர்

6. நிர்மலா சீதாராமன்நிதி அமைச்சர் மற்றும் கார்ப்பொரேட் விவகாரங்கள் அமைச்சர்

7. ராம்விலாஸ் பஸ்வான்நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர்

8. நரேந்திர சிங் தோமர்விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர்; கிராமப்புற வளர்ச்சி அமைச்சர் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்

9. ரவிஷங்கர் பிரசாத்சட்டம் மற்றும் நீதி அமைச்சர்; கம்யூனிகேஷன்ஸ் அமைச்சர்; மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர்

10. ஹர்சிம்ரத் கவுர் பாதல்உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் அமைச்சர்

11. தாவர் சந்த் கெலோட்சமூக நீதி அமைச்சர்

12. சுப்ரமணியம் ஜெய்ஷங்கர்வெளியவுறவுத் துறை அமைச்சர்

13. ரமேஷ் போக்ரியல்நிஷாங்க்‘- மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்

14. அர்ஜுன் முண்டாபழங்குடியின விவகாரங்கள் அமைச்சர்

15. ஸ்மிருதி இரானிபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்

16. ஹர்ஷ் வர்தன்சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர்.

17. பிரகாஷ் ஜவடேகர்சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர்; மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர்

18. பியூஷ் கோயல்இரயில்வே துறை அமைச்சர்; மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்

19. தர்மேந்திர பிரதான்பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர்; மற்றும் எகு துறை அமைச்சர்

20. முக்தர் அப்பாஸ் நக்விசிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர்

21. பிரலஹத் ஜோஷிநாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர், நிலக்கரித் துறை அமைச்சர் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர்

22. மகேந்திர நாத் பாண்டேதிறன் வளர்ப்பு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர்  

23. அரவிந்த் கண்பத் சாவந்த்கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர்

24. கிரிராஜ் சிங்கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறை அமைச்சர்

25. கஜேந்திர சிங் ஷேகாவத்ஜல் சக்தித் துறை அமைச்சர்