இஸ்லாமாபாட்: பாகிஸ்தானைச் சேர்ந்த இராணுவத் தளபதிக்கு அந்நாட்டு நீதிமன்றம், உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி ஆயுள் தண்டனை விதித்துள்ளளது . இதே வழக்கில் சிக்கிய மேலும் இரு கீழ்மட்ட அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உளவு பார்த்தது குறித்தான வழக்கு இராணுவ நீதிமன்றத்தில் இரகசியமான முறையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவத் தளபதி காமர் ஜாவத் பாஜ்வா தேசிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பல முக்கிய விவகாரங்களை கசியவிட்டார் எனக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற லெப்டனென்ட் ஜெனரல் ஜாவத் இக்பாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சட்டப்படி அவர் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார். மேலும், ஓய்வுபெற்ற பிரிகேடியர் ராஜா ரிஸ்வான் மற்றும் இராணுவத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த மருத்துவரான வாசிம் அக்ரம் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் இராணுவம், மேலும் எவ்வித தகவலையும் அளிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரும் யாருக்குத் தகவல்களைக் கொடுத்தனர் என்பது குறித்து விவரமும் வெளியிடப்படவில்லை.