Home One Line P2 ஷங்கருக்கு 2 படங்கள் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுக்க வடிவேலு ஒப்புதல்!

ஷங்கருக்கு 2 படங்கள் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுக்க வடிவேலு ஒப்புதல்!

1862
0
SHARE
Ad

சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நடிப்பில் தயாராக இருந்த இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி” படம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2006-ஆம் வருடம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற பிறகு மீண்டும் அதன் இரண்டாம் பாகம் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.  அதற்கு இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி” என்று தலைப்பு வைத்து இயக்குனர் ஷங்கர் தயாரிக்க, மீண்டும் சிம்புதேவன் இப்படத்தை இயக்கப் போவதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்

இப்படத்தின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே பல பிரச்சனைகளை சந்தித்த படக் குழுவினர். படத்தின் கதை சரியில்லை, திரைக்கதையில் மாற்றம் தேவை, வடிவேலுவின் சம்பளம்வடிவேலு படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேறியது என்று பல சிக்கல்களை சந்தித்து வந்தார்கள்

#TamilSchoolmychoice

இப்பிரச்சனை மிகத்திவீரமாக உருப்பெற்று தயாரிப்பாளர் சங்கம் மூலம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுஇதனால் வடிவேலு இழப்பீடாக 10 கோடி ரூபாய் தர வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, அப்படி இழப்பீடு தராத பட்சத்தில், வடிவேலு எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்ற தடையை விதித்தனர்.

சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது இழப்பீடுக்கு பதிலாக, சம்பளம் வாங்காமல் ஷங்கருக்கு இரண்டு படங்கள் நடித்துக் கொடுப்பதாக கூறியிருக்கிறார்.

இதனால், அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடையை நீக்கியுள்ளது. ஷங்கர் வடிவேலு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து படத்தை கைவிட்டால் மட்டுமே இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.