Home One Line P2 செப்டம்பர் 7-ஆம் தேதி சந்திராயன் 2 நிலவில் இறங்கும்!- இஸ்ரோ

செப்டம்பர் 7-ஆம் தேதி சந்திராயன் 2 நிலவில் இறங்கும்!- இஸ்ரோ

932
0
SHARE
Ad

சென்னை:  சந்திரயான் 2 விண்கலம் நான்காவது சுற்று வட்டப்பாதையை எட்டியுள்ளது என்று இஸ்ரோ நேற்று வெள்ளிக்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

நேற்று இந்திய நேரப்படி மாலை சரியாக 3.27 மணிக்கு சந்திரயான் நான்காவது சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ கூறியிருந்தது. தற்போதுள்ள நிலையில் சந்திரயான் 2 புவியை குறைந்த பட்சம் 277 கிலோ மீட்டரும், அதிகபட்சம் 89,472 கிலோ மீட்டர் தொலைவிலும் நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும்

நிலாவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 செயற்கைகோள் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. புறப்பட்ட 16-வது நிமிடத்தில் ஏழுகலனிலிருந்து விண்கலம் பிரிந்து புவியை குறைந்த பட்சம் 170 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சம் 45, 475 கிலோ மீட்டர் தொலைவிலும் நீள் வட்டப் பாதையில் சுற்றியது

#TamilSchoolmychoice

இதன் பிறகு அடுத்தடுத்து இரண்டு முறை சந்திரயானின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த ஜூலை 30-ஆம் தேதி மூன்றாவது முறையாக சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது.

இதையடுத்து 71, 792 கிலோ மீட்டர் நீள் வட்டப்பாதையில் சந்திரயான் செயற்கைகோள் புவியை சுற்றியது. எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி சந்திரயான் நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது