கோலாலம்பூர்: கடந்த வியாழனன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு அரசியல் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவில்லை என்று வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சர் சுரைடா காமாருடின் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.
அதற்கு பதிலாக, அச்சந்திப்பானது அரசாங்கத்தின் தேசிய சமூக கொள்கை குறித்த ஒரு விளக்கக் கூட்டம் என்று தெரிவித்தார்.
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான அவர் கூறுகையில், பி40 குழுவின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அமைச்சின் முயற்சிகளின் அடிப்படையில் பிபிஆர் வீடுகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக அவர் கூறினார்.
“பி40 குழுவின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தப்பட வேண்டும். நாடு முழுதும் இந்த முன்னேற்றத்தின் முடிவுகளைக் காணும்,” என்று அவர் கூறினார்.
மாநிலத்தில் அரசியல் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கடந்த வியாழக்கிழமை மாலை சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, அது ஓர் அரசியல் கலந்துரையாடல் அல்ல என்றும் அமைச்சின் சமூக முன்முயற்சிகளைப் பற்றி விவாதிப்பதற்காக மட்டுமே அதன் நோக்கம் இருந்ததால் தாம் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார்.