Home இந்தியா இஸ்ரோவின் அடுத்த திட்டம் : ஆதித்யா எல்1 சூரியனை நோக்கி விண்ணில் பாய்ந்தது

இஸ்ரோவின் அடுத்த திட்டம் : ஆதித்யா எல்1 சூரியனை நோக்கி விண்ணில் பாய்ந்தது

432
0
SHARE
Ad

புதுடில்லி : இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சந்திராயன் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை செப்டம்பர் 2-ஆம் தேதி சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சப்பட்டது.

100-120 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலன் இதுவாகும்.

சூரியனை ஆய்வு செய்ய, இன்று காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா தளத்திலிருந்து ஆதித்யா புறப்பட்டது.

#TamilSchoolmychoice

சூரியனை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட ஆதித்யா-எல் 1 திட்டம் ஒத்திகை மற்றும் உள் சோதனைகளை வெற்றிகரமாக முடித்ததாக இஸ்ரோ கூறியது.

சூரியனின் கொரோனா பகுதியை ஆய்வு செய்வது இதன் முக்கிய நோக்கம் ஆகும். சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது.