Home நாடு புலி காணப்பட்ட 4 இடங்கள் எங்கே?

புலி காணப்பட்ட 4 இடங்கள் எங்கே?

412
0
SHARE
Ad

உலு சிலாங்கூர் : காட்டில் விலங்குகளுக்கான வாழ்க்கைச் சூழலில் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவை தொடர்ந்து மனிதர்கள் வாழும் பகுதிகளில் ஊடுருவுவது தொடர்கதையாகி விட்டது.

அந்த வகையில் சிலாங்கூரில் உலு சிலாங்கூர் வட்டாரத்தில் பத்தாங் காலி, கோத்தோங் ஜெயா, செரண்டா, கோலகுபு பாரு என 4 இடங்களில் புலியின் நடமாட்டங்கள் காணப்பட்டதாக காவல் துறையில் புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த இடங்களில் காணப்பட்டது ஒரே புலியா அல்லது வெவ்வேறு புலிகளா என்பதும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

#TamilSchoolmychoice

புலிகளின் நடமாட்டம் இருப்பதாக புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து இந்த வட்டாரங்களில் மறைக்காணிகள் (கேமராக்கள்) பொருத்தப்பட்டன.

அதன் மூலம் இந்தத் தகவல்கள் பெறப்பட்டிருப்பதாக உலு  சிலாங்கூர் வட்டாரக் காவல் துறையின் துணைத் தலைவர் (Deputy OCPD) முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ் தெரிவித்தார்.

காவல்துறை, வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்களும், நடைப் பயணம் மேற்கொள்பவர்களும் கவனமாக இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

டிஎஸ்பி முகமது அஸ்ரி, பொதுமக்கள் அமைதியாக இருக்கவும், காட்சிகளைக் கண்டு பதற்றமடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

“பொதுமக்களுக்கு காவல்துறைக்கு உதவ ஏதேனும் தகவல் இருந்தால் முன்வருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தகவல் உள்ளவர்கள் காவல்துறையை 03-60641132 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.