Home One Line P2 இயக்குனர் ஷங்கருக்கு 57-வது பிறந்த நாள், திரையுலகினர் வாழ்த்து

இயக்குனர் ஷங்கருக்கு 57-வது பிறந்த நாள், திரையுலகினர் வாழ்த்து

661
0
SHARE
Ad

சென்னை: இந்திய சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தனது 57- வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

இயக்குனர் ஷங்கர் தனது அற்புதமான, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பெரிய பொருட் செலவில் படங்களை தயாரிப்பதில் பெயர் போனவர்.

அவர் தனது 27 ஆண்டுகள் திரைப்படத் துறையில் பதிமூன்று படங்களை இயக்கியுள்ளார். அவை அனைத்தும் வெற்றிப்படங்களாக இருந்துள்ளன. இந்த சிறப்பு நாளில், கோலிவுட் பிரபலங்கள் இயக்குனரின் திறமையைப் பாராட்டி சமூகப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் பல இயக்குநர்களுக்கு உத்வேகமாக இருந்துள்ளார். இயக்கம் தவிர, சங்கர் தமிழில் சில படங்களையும் தயாரித்து புதிய திறமைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவரது உதவியாளர்களான வசந்த பாலன், அட்லீ, அறிவழகன் மற்றும் பலர் இப்போது திரைப்படத் துறையில் இயக்குநர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இன்று, அவரது பிறந்தநாளில், இயக்குனர்கள் வசந்தபாலன், அறிவழகன், விக்னேஷ் சிவன், சீனு ராமசாமி, வெங்கட் பிரபு மற்றும் பலர் அவரை சமூக ஊடகங்களில் பாராட்டியுள்ளனர்.

அவரது நம்பமுடியாத படங்களால் அவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தும்படி அவர்கள் ஷங்கரிடம் கேட்டுள்ளனர்.

ஷங்கர் தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்தில் பணியாற்றி வருகிறார். மேலும், இருவரும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இத்திரைப்படம் வாயிலாகக் கைகோர்த்துள்ளனர்.