Home கலை உலகம் “இந்தியன் 2” தாமதத்திற்கு லைக்காவும், கமல்ஹாசனுமே காரணம் – ஷங்கர் ஆவணம் தாக்கல்

“இந்தியன் 2” தாமதத்திற்கு லைக்காவும், கமல்ஹாசனுமே காரணம் – ஷங்கர் ஆவணம் தாக்கல்

674
0
SHARE
Ad

சென்னை : ஷங்கரின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் “இந்தியன் 2”. இந்தப் படத்தை இயக்கி முடித்துத் தருவதில் ஷங்கர் தாமதம் ஏற்படுத்துகிறார் எனக் குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றது.

இந்த வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். படத்தின் தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமான லைக்காவும், படத்தின் கதாநாயகன் கமல்ஹாசனும்தான் காரணம் என பதில் குற்றச்சாட்டுகளை  அடுக்கியிருக்கிறார் ஷங்கர்.

நீதிமன்றத்தில் இரண்டு தரப்புகளும் தங்கள் சார்பு ஆவணங்களை சமர்ப்பித்திருக்கின்றன. இருப்பினும் கடைசியாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது “எந்த விதமான தீர்ப்புகளை வழங்கினாலும் அதனால் பயன் விளையப் போவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட தரப்புகள் சமாதானமாகி ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுரை, கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது போன்ற காரணங்களால் ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பு  மீண்டும் கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது