Home Video இந்தியன் 2 – ஜூலை 12 வெளியீடு!

இந்தியன் 2 – ஜூலை 12 வெளியீடு!

688
0
SHARE
Ad

சென்னை : ஏற்கனவே ஜூன் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ‘இந்தியன்-2’ படத்தின் திரையீட்டுத் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் ஜூலை 12-ஆம் தேதி அந்தப் படம் அனைத்துலக அளவில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அத்துடன் படத்தின் முதல் சிங்கிள் என்னும் முதல் பாடல் மே 22-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

அண்மையில் இந்தியன்-2 படம் குறித்த முன்னோட்டம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியன் படத்தை இயக்கிய ஷங்கர் மீண்டும் 2-ஆம் பாகத்தை இயக்க, இந்தியன் தாத்தாவாக கமல் மீண்டும் திரும்புகிறார். அவர் கைதாகி அழைத்து வரப்படுவதைப் போல் படத்தின் விளம்பரப் பதாகைகள் காட்டுகின்றன.

#TamilSchoolmychoice

இந்தியன் தாத்தாவின் இளமைக் கால சுதந்திரப் போராட்டங்கள் முக்கியக் காட்சிகளாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்காவிலும் இந்தியன்-2 படமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியன்-2 திரைப்படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: