
டெஹ்ரான் : ஈரானிய அதிபர் எப்ராஹிம் ராய்சி பயணம் செய்த இலங்கூர்தி (ஹெலிகாப்டர்) விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரின் நிலைமையும், அந்த இலங்கூர்தியில் பயணம் செய்தவர்களின் நிலைமை குறித்தும் இதுவரை தெரியவில்லை.
இலங்கூர்தி மோசமான வானிலை கொண்ட ஓரிடத்தில் விபத்துக்குள்ளானதால், மீட்புப் பணிகள் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த இலங்கூர்தியில் ஈரானின் வட பகுதி நோக்கி ஈரானிய அதிபர் பயணம் செய்ததாக நம்பப்படுகிறது.
ஈரானின் முக்கிய அரசியல்வாதிகளுடன் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹோசெய்ன் அமிர் அப்துல்லாஹியனும் அந்த இலங்கூர்தியில் பயணம் செய்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.