Home நாடு நோன்பு பெருநாள் மே 13 கொண்டாடப்படும்

நோன்பு பெருநாள் மே 13 கொண்டாடப்படும்

676
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் வியாழக்கிழமை (மே 13) நோன்பு பெருநாளைக் கொண்டாடுவார்கள்.

செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் மலாய் ஆட்சியாளர்களின் முத்திரை காப்பாளர் டான்ஸ்ரீ சையத் டேனியல் சையத் அகமட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மே 12 முதல் ஜூன் 7 வரை நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்ததை அடுத்து, இந்த ஆண்டு நோன்பு பெருநாள் கொண்டாட்டம் புதிய நடைமுறையில் கொண்டாடப்படும்.

#TamilSchoolmychoice

அவசரநிலை, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொருளாதார நோக்கங்கள், தடுப்பூசி பெறுவது போன்ற காரணங்களுக்காக மாவட்ட , மாநில எல்லைகளைக் கடக்கலாம்.