Home நாடு லோக்மான் அடாம் மீண்டும் கைது

லோக்மான் அடாம் மீண்டும் கைது

739
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் அவசர கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டார்.

முகநூல் இடுகையில், லோக்மான் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998- இன் பிரிவு 233- இன் கீழ் விசாரிக்கப்படுவதை உறுதிப்படுத்தினார்.

“இன்றிரவு நான் தொடர்ந்து இங்கு (காவல் நிலையம்) தடுத்து வைக்கப்படுவேன். டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தில் தடுப்புக் காவலில் வைக்க நாளை கொண்டுவரப்படுவேன்.

#TamilSchoolmychoice

“தயவுசெய்து நண்பர்களும் தோழர்களும், எனது விடுவிப்புக்காக பிரார்த்தனை செய்யுங்கள். வரவிருக்கும் நோன்பு பெருநாளைக் கொண்டாடுவதில் எனது குடும்பத்தினருடன் இருக்க உடனடியாக விடுவிக்கப்படுவேன் என்று நம்புகிறேன்,” என்று அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுவரை லோக்மான் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இதற்கு முன்னர் அவர் ஏப்ரல் 3-ஆம் தேதி காவல்துறை அதிகாரி ஷரீமான் சைடின் மரணம் குறித்த அறிக்கை தொடர்பாக அவசர கட்டளைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.