Home நாடு குறைந்த வருகையாளர்களுடன் கோயில்கள் திறக்க அனுமதி

குறைந்த வருகையாளர்களுடன் கோயில்கள் திறக்க அனுமதி

440
0
SHARE
Ad
செந்துல் தண்டாயுதபாணி ஆலயம்

கோலாலம்பூர்: முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்கள் இன்று முதல் ஜூன் 7 வரை அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது செயல்பட முடியும். ஆனால், புதிய நடைமுறைகளின் கீழ் சிறிய கூட்டங்களுடன் அது செய்ய வேண்டியிருக்கும்.

தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின்படி, 1,000- க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்கள் செல்லும் இடங்களில் வழிபாட்டாளர்களின் எண்ணிக்கை 50 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் 1,000 க்கும் குறைவான வழிபாட்டாளர்களைக் கொண்டவர்களுக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

“முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்களுக்கான பிரார்த்தனை நேரம் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அமைச்சு கூறியது.

#TamilSchoolmychoice

தேசிய ஒற்றுமை அமைச்சர் ஹலிமா முகமட் சாதிக், முஸ்லிம் அல்லாத அனைத்து வழிபாட்டு நிர்வாக அமைப்புகளையும், வழிபாட்டாளர்களையும் நடைமுறைகளைக் கடைப்பிடிக்க நினைவூட்டுவதாகவும், தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது மற்றும் கூடல், இடைவெளியை பராமரிப்பது போன்றவற்றை மேற்கோளிட்டுள்ளார்.