Home வணிகம்/தொழில் நுட்பம் விவசாயத்தை மாற்றப் போகும் – தானியங்கி மின்சார டிராக்டர்

விவசாயத்தை மாற்றப் போகும் – தானியங்கி மின்சார டிராக்டர்

468
0
SHARE
Ad

வாஷிங்டன் : உலகம் எங்கிலும் விவசாயங்கள் எப்படி நடைபெறுகின்றன என்பதை முற்றாக மாற்றியமைக்கும் தலைகீழ் தொழில்நுட்பம் விரைவில் வரவிருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஒரு நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் ஒரு டிராக்டர் வாகனம்தான் இந்த மாற்றங்களைக் கொண்டுவரவிருக்கிறது.

மின்சாரத்தினால் இயங்கும் இந்த டிராக்டர், ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் ஓடக் கூடியதாகும்.

#TamilSchoolmychoice

நிலத்தை உழுவது, அறுவடை செய்வது , சமன்படுத்துவது, சீர்திருத்துவது என பலதரப்பட்ட பணிகளை இந்த டிராக்டர் தனித்து செய்து முடிக்கும். இதன் காரணமாக பசுமைத் தொழில்நுட்பம் அறிமுகம் காணும் என்பதுடன் சுற்றுச் சூழல் தூய்மையும் பாதுகாக்கப்படும்.

சுமார் 5 மணிநேரம் இந்த டிராக்டருக்கான மின்கொள்கலத்தை (பேட்டரி) செறிவூட்டினால் (சார்ஜ்) அதன்பின்னர் அந்த டிராக்டர் சுமார் 10 மணிநேரத்திற்கு நில்லாமல் பணி செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்கும்.

மொனார்க் டிராக்டர் என்ற பெயரை (Monarch Tractor) இந்த வாகனம் கொண்டிருக்கும்.

ஒருவர் ரிமோட் கொண்ட்ரோல் எனப்படும் தானியங்கி சாதனம் மூலம் இந்த வாகனத்தைச் செலுத்தலாம்.

குறிப்பாக, இந்தியா போன்ற பின்தங்கிய விவசாயத் தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடுகளில் இதுபோன்ற டிராக்டர்கள் விவசாயத் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனக் கருதப்படுகிறது.