Home நாடு மஇகா தேசியத் தலைவர் போட்டிக்கான வேட்புமனுத் தாக்கல் மே 26 நடைபெறும்

மஇகா தேசியத் தலைவர் போட்டிக்கான வேட்புமனுத் தாக்கல் மே 26 நடைபெறும்

830
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் மே 26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

மஇகாவுக்கு 2021 தேர்தல் ஆண்டாகும். முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி மஇகா கிளைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. இப்போது அடுத்த கட்டமாக மஇகா தேசியத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும்.

இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் தேர்தல் பொறுப்பான்மைக் குழுவுக்கு டான்ஸ்ரீ ஜி.ராஜூ நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குழுவில் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, டத்தோ ஆர்.கணேசன், டத்தோ செல்வா மூக்கையா, வழக்கறிஞர் எஸ்.முருகவேல் ஆகியோரும் ஐவர் கொண்ட இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் மே 26-ஆம் தேதி காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மஇகா தலைமையகத்தில் நடைபெறும்.

போட்டி இருப்பின் அதற்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும்.

மஇகா சட்டவிதிகளின்படி தேசியத் தலைவருக்கான வேட்புமனுப் பாரங்களை ஒருவர் குறைந்த பட்சம் 250-க்கும் மேல் பெற்றால் மட்டுமே அவர் போட்டிக்குத் தகுதி பெற்றவராகக் கருதப்படுவார்.

மஇகாவின் நடப்பு தேசியத் தலைவராக டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கடந்த 2018-இல் 3 ஆண்டு காலத் தவணைக்கு முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேசியத் தலைவருக்கான தேர்தலில் விக்னேஸ்வரன் மீண்டும் போட்டியிடுகிறார். அநேகமாக அவருக்குப் போட்டியிருக்காது என்றும் ஏகமனதாக மீண்டும் தேசியத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.