Home உலகம் வானில் ஆணுறுப்பை வரைந்த அமெரிக்கப் போர் விமானி!

வானில் ஆணுறுப்பை வரைந்த அமெரிக்கப் போர் விமானி!

930
0
SHARE
Ad

US Navyவாஷிங்டன் – கடந்த வியாழக்கிழமை வாஷிங்டன் நகரில், வானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கடற்படையின் போர் விமானம் ஒன்று வழக்கத்திற்கு மாறான திசையில் பறந்தது.

ஆனால், பின்னர் தான் தெரிந்தது. அந்தப் போர் விமானத்தின் விமானி, விஷமத்தனமாக, விமானத்தின் புகை, ஆணுறுப்பை வரையும் படி, விமானத்தின் திசையை மாற்றியிருக்கிறார்.

வானில் விமானத்தின் புகை ஆணுறுப்பைப் போல் தெரிவதைப் படம் பிடித்த பலர் அதனை ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.

#TamilSchoolmychoice

இதனால், அமெரிக்க கடற்படை பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி மீது அமெரிக்க கடற்படை தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.