Home உலகம் மோதிய அமெரிக்க போர்க்கப்பலில் சடலங்கள்!

மோதிய அமெரிக்க போர்க்கப்பலில் சடலங்கள்!

930
0
SHARE
Ad

usa-navy-mccain-shipசிங்கப்பூர் – வாணிபக் கப்பல் ஒன்றுடன் மோதிய எம்எஸ் மெக்கெய்ன் என்ற அமெரிக்க போர்க்கப்பலின் மூடப்பட்ட அறைகளின் உள்ளே சில சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்கக் கடற்படைப் பேச்சாளர் அறிவித்திருக்கிறார்.

அந்தக் கப்பலில் இருந்த 10 கடற்படை வீரர்கள் காணாமல் போனதாகவும் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்க முக்குளிப்பு வீரர்கள் கடலுக்கடியில் கப்பலின் மூடிக் கொண்ட சில அறைகளில் சிக்கிக் கொண்ட கடற்படை வீரர்களின் சடலங்களை மீட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் மோதல் நிகழ்ந்த இடத்தில் சில மைல்கள் தள்ளி கடலில் சடலம் ஒன்றை மலேசியக் கடற்படை கண்டெடுத்துள்ளது.

அந்த சடலம் அமெரிக்க கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்த சடலத்தை அடையாளங்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.