Home உலகம் அமெரிக்கக் கப்பல் மோதல்: 10 மாலுமிகளைத் தேடும் பணி தீவிரம்!

அமெரிக்கக் கப்பல் மோதல்: 10 மாலுமிகளைத் தேடும் பணி தீவிரம்!

817
0
SHARE
Ad

usa-navy-uss john s.mccainசிங்கப்பூர் – நேற்று திங்கட்கிழமை அதிகாலை சிங்கப்பூர் கடற்பகுதியில், எண்ணெய் கப்பலுடன் மோதிய அமெரிக்க கடற்படை கப்பல் ‘ஜோன் எஸ்.மேக்கெய்னில்’ இருந்த 10 மாலுமிகள் கடலில் விழுந்து மாயமாகினர்.

இந்நிலையில், அவர்கள் 10 பேரையும் தேடும் பணி கடந்த 24 மணி நேரங்களாக நடைபெற்று வருகின்றது.

இது குறித்து சிங்கப்பூர் கடல்வழி துறைமுக அதிகார மையம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மாயமான 10 மாலுமிகளையும் தேடும் பணியில், தற்போது இரண்டு கப்பல்களும், 1 ஹெலிகாப்டரும் ஈடுபட்டிருக்கும் நிலையில், மேலும் அதிக படைகளை, தேடும் பணிக்காக அமெரிக்கா அனுப்பும்” என்று தெரிவித்திருக்கிறது.