Home உலகம் சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயத்தின் மீது கிரிமினல் விசாரணை!

சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயத்தின் மீது கிரிமினல் விசாரணை!

885
0
SHARE
Ad

sriveeramakaliammantempleசிங்கப்பூர் – சிங்கப்பூரின் புகழ்பெற்ற வழிப்பாட்டுத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் மீது, அறக்கட்டளை சட்டத்தின் படி, குற்றவியல் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது அறக்கட்டளை ஆணையர் (சிஓசி) இலாகா.

ஆலய நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக சிஓசி தெரிவித்திருக்கிறது.

வர்த்தக விவகாரத் துறையின் உதவியுடன் இவ்விசாரணை நடைபெற்று வருவதாகவும், இவ்விசாரணையினால் ஆலயத்தின் அன்றாட இயக்கத்திலோ, தினசரி நடவடிக்கைகளிலோ எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான லிட்டில் இந்தியா சிராங்கூன் சாலையில், வீரமாகாளியம்மன் ஆலயம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.