Home வணிகம்/தொழில் நுட்பம் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை: டோனி

இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை: டோனி

939
0
SHARE
Ad

tony-fernandes-airasia1கோலாலம்பூர் – கடந்த 2002-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, கடந்த 16 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஏர்ஆசியா நிறுவனத்தின் இணை நிறுவனர்களான டோனி பெர்னாண்டசும், கமாருடின் மெரானுனும் ஓய்வு பெறும் எண்ணம் இல்லையெனத் தெரிவித்திருக்கின்றனர்.

ஏர் ஆசியா தலைமைத்துவத்தில் அதிரடி மாற்றங்கள் வரப்போவதாக ஆரூடங்கள் கூறப்பட்டு வருவதையும் அவர்கள் மறுத்திருக்கின்றனர்.

இது குறித்து டோனி ‘தி எட்ஜ்’ செய்தி நிறுவனத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில், “எனக்கு இன்னும் செய்ய வேண்டிய நிறைய பணிகள் இருக்கின்றன. அதற்காக நான் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றேன். எனவே இப்போதைக்கு நாங்கள் ஓய்வு பெறும் எண்ணமில்லை”

#TamilSchoolmychoice

“பாருங்க.. நாளைக்கே என்னை ஒரு பேருந்து மோதினாலும் கூட, நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கும், காரணம் அது நல்ல ஒரு நிலைமையில் இருக்கிறது” என்று டோனி தெரிவித்திருக்கிறார்.

மேலும், அடுத்த தலைமைத்துவத்திற்கான பட்டியலும் தயாராகவே இருப்பதாகவும், அதில் 50 மூத்த நிர்வாகிகளின் பெயர்கள் இருப்பதையும் டோனி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

என்றாலும், இப்போதைக்கு தன்னாலும், கமாருடினாலும் நிறைய பணிகள் ஆக வேண்டிய நிலையில் இருப்பதால், தாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என்றும் டோனி குறிப்பிட்டிருக்கிறார்.