Home வணிகம்/தொழில் நுட்பம் எண்ணெய் விலை உயர்வுக்கு நான் எதுவும் செய்ய முடியாது: நஜிப்

எண்ணெய் விலை உயர்வுக்கு நான் எதுவும் செய்ய முடியாது: நஜிப்

1003
0
SHARE
Ad

Najib-feature-கோலாலம்பூர் – மலேசியாவில் பெட்ரோல், டீசல் விலை வாரந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றது.

சில வாரங்கள் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. அதேவேளையில் ஹரிராயா போன்ற பண்டிகைக் காலங்களில் விலை குறைவாக இருக்கின்றது.

இந்நிலையில், இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவித்திருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், எண்ணெய் விலையில் தனக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“எண்ணெய் விலை உயர்ந்தாலும் எனக்கு அதிகாரம் இல்லை. எண்ணெய் விலை குறைந்தாலும் எனக்கு அதிகாரம் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.