Home Featured உலகம் ஈரான் காவல் படகை நோக்கி அமெரிக்க கடற்படை துப்பாக்கிச் சூடு!

ஈரான் காவல் படகை நோக்கி அமெரிக்க கடற்படை துப்பாக்கிச் சூடு!

900
0
SHARE
Ad

United_States_Navy-logoவாஷிங்டன் – நேற்று புதன்கிழமை நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் ஈரானின் கடற்படைக்  காவல் படகு ஒன்று, மிக அருகில் வந்து தொந்தரவு கொடுத்த காரணத்தால், அந்தப் படகை நோக்கி அமெரிக்க கடற்படைக் கப்பல் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது, இராணுவ வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெர்சிய வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படையின் ரோந்துக் கப்பல் ஒன்றையும், மற்றும் குவைத் கடற்படைக் கப்பல் ஒன்றையும் நோக்கி வந்த ஈரானிய கடலோரக் காவல் படை படகு ஒன்று மிக அருகில் வந்து வட்டமிடத் தொடங்கியிருக்கின்றது.

persian gulf-mapசம்பவம் நடந்த பெர்சிய வளைகுடா பகுதியின் வரைபடம்…

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமெரிக்க கடற்படை ரோந்துக் கப்பல் ஈரானியக் காவல் படகுக்கு வானொலி மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. இருப்பினும் அந்த எச்சரிக்கைகளை ஈரானியப் படகு புறக்கணித்துவிட்டது என்பதோடு, முறையான பதிலையும் அளிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் சுமார் 600 அடி தூரத்தில் ஈரானியக் கப்பல் நெருங்கி வர, வேறு வழியின்றி அமெரிக்க ரோந்துப் படகு, வழக்கமான கடற்படை நடைமுறைகளின்படி எச்சரிக்கை விடுக்கும் பொருட்டு 3 முறை துப்பாக்கிச் சூடுகளை கடல் நீருக்குள் நடத்தியிருக்கின்றது.

உடனடியாக தங்களின் அருகாமையிலிருந்து வெளியேறும்படி அமெரிக்கக் கடற்படை ஈரானியக் காவல் படகுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கின்றது.

ஈரானின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள அமெரிக்க கடற்படைப் பேச்சாளர் இதுபோன்ற சம்பவங்கள் தேவையற்ற பதட்டத்தை அதிகரிக்கச் செய்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.