Home கலை உலகம் “வடிவேலு தாம் கடந்து வந்த பாதையை மறந்து விட்டார்!”- திரையுலகினர் கருத்து

“வடிவேலு தாம் கடந்து வந்த பாதையை மறந்து விட்டார்!”- திரையுலகினர் கருத்து

1770
0
SHARE
Ad

சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலு நாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம்இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’. இப்படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்க இயக்குனர் ஷங்கர் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருந்தார் சிம்பு தேவன். இப்படத்துக்காக பிரம்மாண்ட அரங்கங்கள் அமைத்து படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இயக்குனருக்கும் வடிவேலுவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கர் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இப்படத்தை முடித்து கொடுக்காமல் அடுத்த படத்தில் நடிக்கக் கூடாது என்று நடிகர் சங்கம் உத்தரவிட்டது. இந்நிலையில் வடிவேலு அளித்துள்ள பேட்டி ஒன்றில், இயக்குனர் ஷங்கர் மற்றம், சிம்புதேவனை கடுமையாக சாடி இருந்தார்.

#TamilSchoolmychoice

இதற்கு இயக்குனர் நவீன் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் கண்டித்துள்ளனர். இதற்கிடையில், வடிவேலுவின் மீதான எதிர்ப்பு மேலோங்கி உள்ளது. தாம் கடந்து வந்த பாதையை வடிவேலு மறந்து விட்டதாகவும், பெயர் புகழ் வந்ததும் அவரும் பிறரைப் போல் தலைக்கனத்தில் இருப்பதாகவும் மக்கள் கருத்துரைத்து வருகின்றனர்.

பொதுவாக தமிழ் திரைப்படச் சூழலில் நடிகர்கள் அவர்களுக்கான இரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றதும், இயக்குனர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்து விடுவார்கள்.

இந்நிலை தொடர்ந்தால் இனி வடிவேலுவை தமிழ் திரைப்படங்களில் காண்பது அரிதாகிவிடும் எனத் தோன்றுகிறது.