Home கலை உலகம் யார் இந்த காண்ட்ரேக்டர் நேசமணி? சமூகப் பக்கங்களில் உலாவும் வடிவேலுவின் பாத்திரம்!

யார் இந்த காண்ட்ரேக்டர் நேசமணி? சமூகப் பக்கங்களில் உலாவும் வடிவேலுவின் பாத்திரம்!

1802
0
SHARE
Ad

சென்னை: கடந்த 2001-ஆம் ஆண்டு வெளிவந்த பிரண்ட்ஸ் எனும் திரைப்படத்தில் கொண்ட்ரேக்டர் நேசமணி கதாபாத்திரத்தை எடுத்து நடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது ஒரே நாளில் டுவிட்டர் மற்றும் முகநூலில் பிரசித்திப் பெற்று வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய், சூர்யா, ரமேஷ் கிருஷ்ணா, தேவயாணி ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

“பிரே பார் நேசமணி (#Pray_for_Neasamani)” எனும் ஹேஸ்டேக்கும் பரவலாகப் பகிரப்பட்டு, வெளிநாட்டவர்கள் யாரென்று தெரியாமலேயே அதனை பகிரத் தொடங்கி உள்ளனர். அவர் கூடிய விரைவில் நலமடைய வேண்டும் என்றும் வேண்டி வருகின்றனர். பின்பு, அதன் விவரம் தெரிய வந்ததும், மிகுந்த நகைச்சுவைக்கு ஆளாகி உள்ளது இந்த கதாபாத்திரம்.

இத்திரைப்படத்தில் வடிவேலுவும் (நேசமணி) அவரது சக தொழிலாளர்களும் வண்ணம் பூசுவதற்காக ஜமின் வீட்டிற்கு செல்வர். அங்கு மறுசீரமைப்புப் பணிகள் வெகு வேகமாக நடந்துக் கொண்டிருக்கையில், திடீரென கிருஷ்ணமூர்த்தி (ரமேஷ் கிருஷ்ணா) என்பவர் அவரது கையில் உள்ள சுத்தியலை தவறுதலாக வடிவேலுவின் உச்சி தலையில் போட்டு விடுவார். அதனால், மயங்கி விழும் நேசமணி எனும் அந்தப் பாத்திரம் 19 வருடத்திற்குப் பிறகு தற்போது பிரசித்திப் பெற்று இரசிகர்கள் மத்தியில் வேடிக்கையாக பகிரப்பட்டு வருகிறது.    

#TamilSchoolmychoice

முகநூலில் சுத்தியல் போட்ட படம் ஒன்று பதிவிடப்பட்டு, அதனை உங்கள் நாட்டில் எவ்வாறு அழைப்பர் என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட பின்னூட்டத்தில் நேசமணி கதாபாத்திரம் சொருகப்பட்டது. அதற்குப் பிறகு இது பரவலாக அத்திரைப்பட கதையுடன் கோர்த்து பரவலாகப் பகிரப்பட்டது.