Home நாடு அடிப்: விசாரணையை கண்காணிக்க குடும்பத்தார் வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கலாம்!

அடிப்: விசாரணையை கண்காணிக்க குடும்பத்தார் வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கலாம்!

600
0
SHARE
Ad

திரெங்கானு: முகமட் அடிப்பின் மரண விசாரணையை கண்காணிக்கும் விதமாக வேண்டுமானால், அவரது குடும்பத்தார், வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கலாம் என வீடமைப்பு மற்றும் நகராட்சிமன்ற துணை அமைச்சர் செனட்டர் ராஜா காமாருல் பாரின் ஷா ராஜா அகமட் பாஹாருடின் ஷா கூறினார்.

அடிப்பின் வழக்கு விசாரணையில் அவ்வழக்கறிஞர் சம்பந்தப்பட முடியாது, ஏனெனில் அது, அரசாங்கத்தை, அரசாங்கமே எதிர்க்கும் வகையில் இருக்கும் என அவர் தெரிவித்தார். கடந்த திங்களன்று, வீடமைப்பு மற்றும் நகராட்சிமன்ற அமைச்சை பிரதிநிதித்த வழக்கறிஞர் ஷாஸ்லின் மன்சோர் தாம் அடிப்பின் வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் இந்த நியமனம் இரத்தானதை உறுதி செய்த அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், ஷாஸ்லின் அரசாங்கத்தை பிரதிநிதித்து வாதிடுவதிலிருந்துதான் நிறுத்தப்பட்டாரே தவிர, அடிப்பின் குடும்பத்தாரை வேண்டுமானால் அவர் பிரதிநிதிக்கலாம் எனக் கூறியிருந்தார். ஆயினும், ஷாஸ்லின் எல்லா நிலைகளிலும் இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாகக் கூறினார்.