Home இந்தியா இந்தியா: “மத்திய அமைச்சர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்!”- மோடி

இந்தியா: “மத்திய அமைச்சர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்!”- மோடி

937
0
SHARE
Ad

புது டில்லி: இந்திய அமைச்சர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார்.

புதிதாக பதவியை ஏற்றிருக்கும் மத்திய அமைச்சர்கள் நேரம் தவறாமல் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

நடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

#TamilSchoolmychoice

இதனையடுத்து இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். மத்திய அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில் மீண்டும் ஆட்சியமைத்த பின்னர் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வீட்டிலிருந்தே பணி செய்யவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மூத்த அமைச்சர்கள் புதிய அமைச்சர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே போல், எல்லா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும், பொதுமக்களையும் அமைச்சர்கள் சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.