Home இந்தியா இஷா அம்பானி திருமணத்திற்கு 200 வாடகை விமானங்கள்

இஷா அம்பானி திருமணத்திற்கு 200 வாடகை விமானங்கள்

1284
0
SHARE
Ad
மணமக்கள் இஷா அம்பானி, ஆனந்த் பிரமல் ஆகியோருடன் முகேஷ் அம்பானி தம்பதியர்

உதய்பூர் – இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் கோட்டைகள், கொத்தளங்கள் நிறைந்த நகர். அழகிய அரண்மனைகள் கொண்ட உதய்பூர் நகரில் பல அரண்மனைகளில் பெரும் பணக்காரர்களின் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இங்குள்ள அரண்மனை ஒன்றில் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் புதல்வி இஷா அம்பானிக்கும், பிரமல் குழுமத்தின் வாரிசான ஆனந்த் பிரமலுக்கும் இடையிலான திருமணத்தை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.

எதிர்வரும் டிசம்பர் 12-ஆம்  தேதி இஷாவுக்கும், ஆனந்த் பிரமலுக்கும் இடையிலான திருமணம் மும்பையில் நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

திருமணத்திற்கு முன்பான சடங்குகள் உதய்பூரில் டிசம்பர் 8, 9 தேதிகளில் நடைபெறுகிறது.

இந்தத் திருமணம் குறித்த செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்குத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

உதய்பூர் நகர் நாளொன்றுக்கு சுமார் 19 விமானங்கள் மட்டுமே தரையிறங்கிச் செல்லும் விமான நிலையத்தைக் கொண்ட சிறிய நகர்தான். ஆனால், அம்பானி வீட்டுத் திருமணத்தை முன்னிட்டு சுமார் 200 தனியார் விமானங்கள் தரையிறங்கும் என்பதால் அதற்கேற்ப உதய்பூர் விமான நிலையத்தின் பயண அட்டவணை மாற்றியமைக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தனது குடும்பத்தினர் உறவினர்களுக்கு உதய்பூர் செல்ல அவர்களுக்காக மட்டுமே 80 முதல் 100 விமானங்களை அம்பானி வாடகைக்கு அமர்த்தியிருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.