Home நாடு ஐசெர்ட் பேரணி முடிந்ததும், கார் ஓட்டி நகரை வலம் வந்த மகாதீர்

ஐசெர்ட் பேரணி முடிந்ததும், கார் ஓட்டி நகரை வலம் வந்த மகாதீர்

1929
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணி நிறைவடைந்ததும், அதன் பாதிப்புகளை நேரில் காண்பதற்காக, சொந்தமாக, தானே காரை ஓட்டிக் கொண்டு தலைநகரை வலம் வந்திருக்கிறார் பிரதமர் துன் மகாதீர்.

பேரணிக்குப் பின்னர் தலைநகரின் முக்கியத் தெருக்கள் என்ன நிலைமையில் இருக்கின்றன என்பதைக் காண புதிய ரக புரோட்டோன் (new Proton X70 SUV) காரைத் தானே ஓட்டிக் கொண்டு காவல் துறையினர் பாதுகாப்பு வாகனங்கள் முன் செல்ல கோலாலம்பூரை மகாதீர் சுற்றிப் பார்க்கும் காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

பிரதமர் தனது வீட்டிலிருந்து கிளம்பிச் சென்று சுற்றிப் பார்த்தார் என பிரதமர் அலுவலகத் தகவல்கள் கூறியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரின் தங்க முக்கோணம் என்று அழைக்கப்படும் பகுதியில் மகாதீர் கார் ஓட்டிச் சென்றதைப் பார்த்ததாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிருக்கின்றனர்.