மாலை 4.30 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை கூட்டத்தைக் கலைக்க,பங்கேற்பாளர்கள் கலைந்து செல்லத் தொடங்கினர்.
குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நடந்தேறிய இன்றைய பேரணியில் சுமார் 5 இலட்சம் பேர் கலந்து கொண்டதாக அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி பெருமையுடன் கூறினார்.
இந்தப் பேரணியில் சாஹிட், பாஸ் தலைவர் ஹாடி அவாங், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் முன்னாள் பிரதமர் நஜிப் ஆகியோர் உள்ளிட்ட பல தலைவர்கள் உரையாற்றினர்.
நடந்து கொண்டிருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் நடப்பு ஆட்சி சீக்கிரம் முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இன்றைய பேரணி நிறைவு கண்டது.