Home நாடு ஐசெர்ட் பேரணி : நஜிப்பும் இணைகிறார்

ஐசெர்ட் பேரணி : நஜிப்பும் இணைகிறார்

1244
0
SHARE
Ad
பேரணியை ஒழுங்குபடுத்துவதற்காக சுமார் 2 ஆயிரம் பாஸ் கட்சி பணிப்படையினர் அணிவகுத்திருக்கின்றனர்

கோலாலம்பூர் – (பிற்பகல் 2.00 மணி நிலவரம்) இன்று சனிக்கிழமை நடைபெறும் ஐசெர்ட் (ICERD) எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொள்வதற்காக பலரும் காலை முதல் கோலாலம்பூரின் தெருக்களில் குழுமத் தொடங்கியுள்ள நிலையில் அவர்களோடு, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் இணைந்துள்ளார். அவர் அம்னோ தலைமையகம் அமைந்திருக்கும் புத்ரா உலக வாணிப மையத்திற்கு வந்தடைந்தார்.

இந்தப் பேரணி குறித்த ஆகக் கடைசியான தகவல்கள் வருமாறு:

  • கம்போங் பாருவில் உள்ள சுல்தான் சுலைமான் கிளப் வளாகத்திற்கு அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி வந்தடைந்தார். அங்கு பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங்குடன் இணைந்து கொண்ட அவர் பின்னர் அங்கிருந்து தேசிய பள்ளி வாசல் வந்தடைந்தனர்.
  • டத்தாரான் மெர்டாக்கா சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் 3 ஆயிரம் பேர் மதியத் தொழுகை நடத்தினர்.
  • மலாய் – முஸ்லீம் அரசு சாரா அமைப்புகள் இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்தன. ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணி பின்னர் பேரணி 812 என இன்றையத் தேதியைக் குறிக்கும் விதத்தில் பெயர் மாற்றம் கண்டது.
  • பாஸ் கட்சியைச் சேர்ந்த பணிப்படையினர் சுமார் 2 ஆயிரம் பேர் சிவப்பு நிற சீருடையில் பேரணியை ஒழுங்குபடுத்துவதற்காக பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
  • பேரணி நடைபெறும் வளாகங்களில் குளிர்பானங்கள், சிற்றுண்டிகள், மற்றும் நினைவுச் சின்னங்கள் விற்பனை செய்யும் தற்காலிகக் கடைகள் நிறைய அளவில் முளைத்திருக்கின்றன.
  • தேசியப் பள்ளி வாசல் வளாகத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் பேர் குழுமியிருக்கலாம் என காவல் துறையினர் மதிப்பிட்டுள்ளனர்.
  • காவல் துறையினர் நிறைய அளவில், தண்ணீர் பாய்ச்சும் கருவிகள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளுடன் – குவிக்கப்பட்டுள்ளனர்.
  • சோகோ பேரங்காடி முன் நடைபெற்ற மதிய வேளைத் தொழுகையை பாஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நிக் அசிசின் மகன் நிக் அப்டு முன்னின்று நடத்தினார்.