Home நாடு ஐ.நா. : ஐசெர்ட் குறித்து மலேசியாவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்!

ஐ.நா. : ஐசெர்ட் குறித்து மலேசியாவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்!

1031
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஐசெர்ட் உடன்படிக்கையை மலேசியா ஏற்றுக்கொள்ளாததன் காரணத்தை கண்காணிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா), குழு ஒன்றினை அமைத்து கண்காணிக்கும் என ஐ.நாவின் இனவாத பாகுபாடு நீக்கம் (செர்ட்) அமைப்பில் அங்கத்துவம் பெற்றிருக்கும் 18 பேர்களில் ஒருவரான குன் குச் கூறினார். ஐசெர்ட் உடன்படிக்கையை அங்கீகரிக்காமல், இன பாகுபாட்டை அகற்ற ஏற்றுக்கொள்வதாக மலேசியா கூறியிருப்பது குழப்பமாக இருப்பதாக அவர் கூறினார்.

இம்மாதம் (டிசம்பர்) ஐசெர்ட் உடன்படிக்கையை புத்ராஜெயா அங்கீகரிக்காததைத் தொடர்ந்து நடைபெற்ற “நன்றி கூறல்” பேரணிக்குப் பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“ஐசெர்ட் பற்றி பேசுவதற்கு கோலாலம்பூருக்கு வரும்படி ஐ.நா. மனித உரிமைகள் குழு என்னை கேட்டபோது, ​​ஒரு தீவிர சர்ச்சையின் நடுவில் நான் விழுந்துவிடுவேன் என்று எனக்குத் தெரியாது. அது ஒரு சாதாரண சந்திப்பாகத்தான் இருக்கும் என நினைத்தேன்”, என குன் குச் கூறினார்.

#TamilSchoolmychoice

இனப் பாகுபாடுகளுக்கு எதிராக தனிநபர்களின் பாதுகாப்பிற்காக இயங்கிக் கொண்டிருக்கும், ஒரு உலகளாவிய மாநாட்டின் உடன்படிக்கை,  மலேசியாவில் எப்படி அரசியலாக்கப்பட்டது என அவர் கேள்வி எழுப்பினார். இவ்விவகாரத்தைப் புரிந்துகொள்ள தமக்கு கடினமாக இருப்பதாக அவர் கூறினார்.

செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபையில், டாக்டர் மகாதீர் முகமட் ஐ.நாவின் இதர மனித உரிமைகள் உடன்படிக்கைகளை மலேசியா ஏற்றுக் கொள்வதாக கூறினார்.  அவற்றில் ஐசெர்ட்டும் அடங்கும்.

அதற்கு பின்னர், எழுந்த நெருக்கடிக்கு பிறகு, இந்த உடன்படிக்கை தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என அரசாங்கம் அறிவித்தது.  1995-லிருந்து மலேசியா, இதுவரையிலும் மூன்று ஐ.நாஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுதுள்ளது.