கோலகுபு பாரு: தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் இணைவதற்கு 57,000 விண்ணப்பங்கள் நாடு தழுவிய அளவில் பெறப்பட்டுள்ளதாக, மத்தியப் பகுதி தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக் கழகத்தின் தளபதி, முகமட் அலி இஸ்மாயில் கூறினார்.
இராணுவம் மற்றும் காவல் துறையைப் பார்ப்பது போல மக்கள் தீயணைப்பு வீரர்களை பார்ப்பதில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக முகமட் அடிப் முகமது காசிம் போன்ற வீரர்களின் துயரமான கதைகள், நாட்டு மக்களைச் சென்றடைகின்றன. இம்மாதிரியான, சூழல்களில் மக்களுக்கு எங்கள் மீது மரியாதையும், அடிப் போன்று பணியிலிருக்கும் போது மரணமுற்றவர்களை வீரர்களாக மக்கள் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர் என்றார்.
கடந்த மாதம் சீ பீல்ட் கோயில் வளாகத்தில் நடந்த கலவரத்தில் அடிப் தாக்கப்பட்டு, டிசம்பர் 17-ம் தேதி மருத்துவமனையில் காலமானார். அவரது, இறப்பானது பலரை இத்துறையில் இணைந்து சேவையாற்ற வித்திட்டிருக்கிறது என அவர் கூறினார்.
தேர்வு செய்யப்பட்டோர், முதலில் உடல் வலிமை சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதனை அடுத்து, வாய்மொழி சோதனைக்கு அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
2018-ல் மட்டும், 7 தீயணைப்பு வீரர்கள் பணியில் இருக்கும் போது தங்களின் உயிர்களை அர்ப்பணித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.