Home கலை உலகம் டிசம்பர் 28 பேட்ட படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

டிசம்பர் 28 பேட்ட படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

1140
0
SHARE
Ad

சென்னை: ரஜினிகாந்தின் அடுத்தப் படமானபேட்டபொங்கலுக்குவெளிவர இருக்கும் வேளையில் அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கடந்த வாரங்களில் வெளியிடப்பட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. மேலும், மெருகூட்டும் வண்ணமாக , ரஜினிகாந்தின் பிறந்த நாளன்று, பேட்ட படத்தின் சிறப்பு முன்னோட்டக் காணொளியும் வெளியிடப்பட்டது.

பேட்ட படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன், சசிகுமார், நவாசுதீன் சித்திக் ஆகியோரும் இணைகிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகயுள்ள இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வரும் டிசம்பர் 28 (வெள்ளிக்கிழமை) அன்று வெளிவரவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இத்திரைப்படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.