Home நாடு வறிய நிலையில் உள்ளவர்களுக்கு 40 ரிங்கிட் மின்சாரக் கட்டணத் தள்ளுபடி!

வறிய நிலையில் உள்ளவர்களுக்கு 40 ரிங்கிட் மின்சாரக் கட்டணத் தள்ளுபடி!

752
0
SHARE
Ad

புத்ராஜெயா: மின்சாரம், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் (MESTECC) அமைச்சின் மூலமாக, அரசாங்கம் வறிய நிலைக் குடும்பங்களுக்கு 40 ரிங்கிட் மின்சாரக் கட்டணத் தள்ளுபடி திட்டத்திற்காக, 80 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இகசெ (eKasih) திட்டத்தில் பதிந்துள்ளவர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் காலாவதியாக இருக்கும் 20 ரிங்கிட் மின்சாரக் கட்டணத் தள்ளுபடி திட்டத்திற்கு, மாற்று திட்டமாக, இத்திட்டம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம்தேதிவரையிலும் நடைமுறையில் இருக்கும் என அறிக்கைஒன்றின் வாயிலாக அமைச்சு தெரிவித்தது.

நவம்பர் 2-ஆம் தேதி, 2019-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டபடி, மக்கள் நலன் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் அக்கறை உள்ளதை உணர்த்தும் பொருட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இது தொடர்பான மேல் விபரங்களுக்கு, அரசாங்கம், மின்சாரம், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் (MESTECC) அமைச்சின் அகப்பக்கத்தில், https://semakanrebat.mestecc.gov.my சரிபார்க்கலாம், அல்லது 03-8000 8000 என்ற எண்ணில் அரசு அழைப்பு மையத்தை (MyGCC) தொடர்பு கொள்ளலாம்.