Home இந்தியா 2004-ஆம் ஆண்டு ஆழிப் பேரலையால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது!

2004-ஆம் ஆண்டு ஆழிப் பேரலையால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது!

911
0
SHARE
Ad

சென்னை: கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவுஅனாக் கிராகாதவ் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியதுஇதுவரையிலும், இத்துயரச் சம்பவத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 400-கும் மேற்பட்டு உயர்ந்துள்ளது.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரப்பட்டு வரும் இந்நிலையில், 14 வருடத்திற்கு முன்பாக இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலட்சக் கணக்கான உயிர்கள் பல நாடுகளில் பலியாயின. அக்கோரச் சம்பவம், கடந்த 2004-ஆம் ஆண்டு 26-ஆம் தேதி டிசம்பரில் ஏற்பட்டு, பலரது வாழ்நாளில் மறக்க முடியாத தினமாகவே இன்று வரை நிலைக் கொண்டுள்ளது.   

அந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில், கடற்கரைப் பகுதிகளில் ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு தமிழகக் கடற்கரையோரங்களில், அவரவர் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்

#TamilSchoolmychoice

கடந்த 2004-ல் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் தமிழகக் கடலோரப் பகுதியில் 8,000 –கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த பேரழிவில் இந்தோனிசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் பெரும் உயிர் இழப்பை சந்தித்தன. 14 நாடுகளைச் சேர்ந்த 230, 000 பேர் உயிரிழந்தனர்.

கடற்கரையோரங்களில் குவிந்த சடலங்களை ஒரே குழியில் புதைக்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. அந்த சம்பவத்தை நினைவூட்டும் விதமாக, இன்று 14-வது ஆழிப் பேரலைத் தினம் அனுசரிக்கப்படுகிறது.