அதற்கு இந்தியா மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், கண்டனமும் கிளம்பியது. இங்கிலாந்திடம் அகிம்சை வழியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்த மகாத்மா காந்தியை இழிவு படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் பீர் பாட்டிலில் இருந்து காந்தி படத்தையும், மதுவின் பெயரையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வலியுறுத்தப்பட்ட அதைத் தொடர்ந்து பீர் பாட்டிலில் இருந்து காந்தி பெயர் மற்றும் படத்தை அந்த நிறுவனம் நீக்குகிறது.
அமெரிக்க வாழ் இந்திய வர்த்தகர்கள் மற்றும் பிரதிநிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு நீக்குவதற்கான முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த விவகாரத்தில் அந்நிறுவனம் மன்னிப்பு கேட்து குறிப்பிடத்தக்கது.